உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்போரூர் கோவில்களில் மண்டலாபிஷேகம் நிறைவு

திருப்போரூர் கோவில்களில் மண்டலாபிஷேகம் நிறைவு

திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலின் துணை கோவில்களில், மண்டலாபிஷேகம் நேற்று நிறைவடைந்தது. திருப்போரூர் கந்தசுவாமி கோவிலின் துணை கோவில்களான முள்ளட்சி அம்மன், வேண்டவராசி அம்மன் மற்றும் வினைதீர்க்கும் விநாயகர் கோவில்களில், கடந்த பிப்ரவரி மாதம் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடந்தது. இதையடுத்து, தினசரி மாலை மண்டல அபிஷேகம் நடந்து வந்தது. நேற்று முன்தினம், மூன்று கோவில்களிலும் மண்டலாபிஷேகம் நிறைவு விழா நடந்தது. விழாவையொட்டி, யாக சாலை பூஜைகள், மலர் அர்ச்சனை துாப, தீப ஆராதனை விமரிசையாக நடத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !