சேலம் சவுடேஸ்வரி கோயிலில் கத்தி போடும் விழா!
ADDED :4211 days ago
சேலம்: சேலம் சவுடேஸ்வரி கோயிலில் கத்தி போடும் விழா நடந்தது. தெலுங்கு வருட பிறப்பு யுகாதி பண்டிகையையொட்டி சேலம் பொன்னம்மாபேட்டை ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி கோவிலில், பக்தர்கள் கத்தி போட்டபடி ஆடிக்கொண்டு ஊர்வலமாக வந்தனர். மேலும் சத்திரம் பால் மார்க்கெட் அஷ்டலட்சுமி லட்சுமி நாராயணர் கோவிலில் மூலவர் லட்சுமி நாராயணன், சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.