உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாகை , புத்தூர் செங்காமிர்த மாரியம்மன் கோவில் விழா

நாகை , புத்தூர் செங்காமிர்த மாரியம்மன் கோவில் விழா

நாகப்பட்டினம்: நாகை தாலுகா புத்தூரில் உள்ள செங்காமிர்த மாரியம்மன் கோவிலில் பங்குனி உற்சவ திருவிழா கடந்த தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிசேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் செய்து வழிபாடு நடைபெற்றது.  மதியம் அம்மனுக்கு மகாஅபிசேகம், தீபாராதனை, கஞ்சிவார்த்தல் ஆகியவை நடைபெற்றன. தொடர்ந்து அம்மன் மின் அலங்கார ரதத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !