உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொல்லங்கோடு பத்ரகாளி கோவிலில் தூக்க நேர்ச்சை

கொல்லங்கோடு பத்ரகாளி கோவிலில் தூக்க நேர்ச்சை

குமரி: கொல்லங்கோடு பத்திர காளி அம்மன் கோவில் தூக்கத் திருவிழா கடந்த 24--ம்  தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் 3- வது நாளில்  1498 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நிறைவேற்ற பெயர் பதிவு செய்யப்பட்டது.  9- வது நாளான இன்று (செவ்வாய்க் கிழமை) காலை 9 மணிக்கு சமய சொற்பொழிவு, 11.45 மணிக்கு மதிய பூஜை போன்றவை நடக்கின்றன. மாலை 3 மணிக்கு தூக்கக் காரர்களின் கடல் நீராட்டு நடக்கிறது. நிகழ்ச்சியில், தூக்கக்காரர்கள் முக்கிய பூஜாரியுடன் வள்ளவிளை கடலில் நீராடி, பஞ்சகவ்விய முழுக்கல், கலச பூஜைகளுக்கு பின் பூரண கும்பத்துடன் கோவிலை அடைவார்கள்.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான தூக்க நேர்ச்சை நாளை (புதன்கிழமை) நடக்கிறது.  இந்த ஆண்டு 1498 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நிறைவேற்றப் படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !