சோழவந்தான் ஜெனகைமாரியம்மன் கோயிலில்.. மூன்றுமாத கம்பத்தில் கொடியேற்றுவிழா!
ADDED :4212 days ago
சோழவந்தான்: சோழவந்தான் ஜெனகைமாரியம்மன் கோயிலில் மூன்றுமாத கம்பத்தில் கொடியேற்றுவிழா நடந்தது. இக்கோயிலில் வைகாசி மாதத்தில் 17 நாட்கள் திருவிழா நடக்கும். இத்திருவிழாவை முன்னிட்டு மூன்று மாதத்திற்கு முன்னதாக கோயில் முன்பு அமைந்துள்ள திருபலிபீட கம்பத்தில் கொடியேற்றுவிழா ஆண்டுதோறும் நடப்பதுண்டு. அந்த நிகழ்ச்சி நேற்று இரவு 9 மணிக்குமேல் நடந்தது. பக்தர்கள் புடைசூழ பூசாரி கணேசன் கொடியை சுமந்து ரதவீதி சுற்றி கோயில் வர, திருபலிபீட கம்பத்தில் பக்தர்கள் பக்தி கரகோஷம் முழங்க கொடியேறியது. அம்மன் ராஜஅலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். உபயதார் ராசுஅம்பலம் குமாரர்கள், நிர்வாக அதிகாரி ராஜேந்திரகுமார், ஆலய ஊழியர்கள் சுந்தரம், தர்மராஜ் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.