மேல்நாரியப்பனூர் ஆலயத்தில் தவக்காலசிறப்பு தியானம்
ADDED :4524 days ago
சின்னசேலம்: சின்னசேலம் அருகே மேல்நாரியப்பனூர் ஆலயத்தில் தவக்கால சிறப்பு தியானம் நடந்தது. சின்னசேலம் அருகே மேல்நாரியப்பனூரில் புனித அந்தோனியார் ஆலயம் உள்ளது. ஏப்., மாதத்தின் முதல் செவ்வாய்கிழமை என்பதால் சிறப்பு தவக்கால பிரார்த்தனை நடந்தது. காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை நடந்த சிறப்பு தியானத்தில் உடல்நலம் வேண்டி இறைமக்கள் கலந்துக் கொண்டனர். தியான ஏற்பாடுகளை பங்கு தந்தை பால்ராஜ் செய்து வைத்தார். அருட்தந்தைகள் செல்வம், யூஜின்டோனின் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.இதில் விழுப்புரம், சேலம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த இறை மக்கள் கலந்துக் கொண்டனர்.