திரவுபதியம்மன் கோவில்சித்திரை திருவிழா துவக்கம்
உளுந்தூர்பேட்டை: சேந்தநாடு திரவுபதியம்மன் கோவில் சித்திரை திருவிழா மற்றும் 17ம் தேதி நடக்கும் தேர் ரத உற்சவத்தையொட்டி கோவிலில் கொடியேற்றம்நடந்தது.
உளுந்தூர்பேட்டை அடுத்த சேந்தநாடு திரவுபதியம்மன் கோவில் சித்திரை திருவிழாவையொட்டி நேற்று காலை 7.30 மணிக்கு கோவிலில் கொடியேற்றம் நடந்தது. சித்திரை திருவிழாவில் 11ம் தேதி காலை 7.30 மணிக்கு திருக்கல்யாணம், இரவு சுவாமி வீதியுலா நடக்கிறது.
12ம் தேதி முதல் 16ம் தேதி வரை இரவு சுவாமி வீதியுலா நடக்கிறது. 15ம் தேதி இரவு 7 மணிக்கு அரவான் கடபலி கொடுத்தல் நடக்கிறது. 17ம் தேதி காலை 9 மணிக்கு தேர் ரத உற்சவம் நடக்கிறது. தேரினை மயிலம் பொம்மபுர ஆதீனம் 20ம் பட்டம் சிவஞானபாலய சுவாமிகள் துவக்கி வைக்கிறார்.இரவு கரக உற்சவமும், 18ம் தேதி மாலை 5.30 மணிக்கு தீ மிதித்தலும், 19ம் தேதி பகலில் மஞ்சள் நீர் உற்சவமும், இரவு பட்டாபிஷேகம் நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ராமசாமி மற்றும் கிராமத்தினர் செய்து வருகின்றனர்.