ஈரோடு சக்தி மாரியம்மன் கோவில் பொங்கல் விழா!
ADDED :4220 days ago
ஈரோடு: சக்தி மாரியம்மன் கோவிலில், இன்று பொங்கல் விழா நடக்கிறது. ஈரோடு முத்துசாமி காலனி, சக்தி மாரியம்மன் கோவிலில் கடந்த, 25ம் தேதி பூச்சாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. 26ம் தேதி கம்பம் நடுதலும், 27 முதல், 31ம் தேதி வரை, ஐந்து நாட்கள் பூவோடு எடுத்தல், கம்பத்துக்கு மஞ்சள் நீர் ஊற்றுதல் நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று தீர்த்தம் எடுத்தலும், இரவு பழங்களால் மாரியம்மனுக்கு பூஜை செய்யும் நிகழ்ச்சியும் நடந்தது. இன்று காலை அம்மன் அழைத்து வருதல், பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும், மாலையில் மாவிளக்கு எடுத்தல், அலகு குத்துதல், விசேஷ அலங்கார பூஜைகள் நடக்கிறது. நாளை மஞ்சள் நீர் விழா நடக்கிறது. அன்று நகரின் முக்கிய வீதிகள் வழியாக, அம்மன் திருவீதி உலா நடைபெறும். தொடர்ந்து மறுபூஜை நடக்கிறது.