வரசித்தி விநாயகர் கோயிலில் ஏப்.,13ல் திருக்கல்யாணம்!
ADDED :4220 days ago
மதுரை : மதுரை கூடல்நகர் அசோக்நகர் வரசித்தி விநாயகர் கோயிலில், ஏப்.,13ல் கரிய மாணிக்கப்பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி திருக்கல்யாணம் நடக்கிறது. சோமநாராயண பாகவதர் தலைமை வகிக்கிறார். இதைமுன்னிட்டு, ஏப்.,12ல் விக்னேஸ்வர பூஜை உட்பட பல்வேறு பூஜைகள் நடக்கின்றன. ஏப்.,13ல் காலை 10 மணி முதல் 12 மணிக்குள் திருக்கல்யாணம் நடக்கிறது. ஏற்பாடுகளை, பாஸ்கர வாத்தியார் செய்து வருகிறார்.