உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கணியூரில் மழை வேண்டி சிறப்பு வழிபாடு!

கணியூரில் மழை வேண்டி சிறப்பு வழிபாடு!

மடத்துக்குளம் : மடத்துக்குளம் அருகே கணியூரில் மழை வேண்டி திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது. பருவ மழைபொய்த்து போனதால், வறட்சி அதிகரித்து வருகிறது. பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு மிகவும் அதிகரித்துள்ளது. இதனால், மக்கள் மழை வேண்டி பல வேண்டுதல்கள், வழிபாடுகள் செய்து வருகின்றனர். மடத்துக்குளம் அருகே கணியூரில் மழைவேண்டி திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நேற்றுமுன்தினம் நடந்தது. விளைநிலங்களுக்கு மத்தியில் காலை 8.00 மணி முதல் மதியம் 12.00 மணிவரை திருவாசகம் பாடல்கள் பாடப்பட்டன. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !