யுகாதி திருவிழாவில் போட்டி விமரிசையாக கொண்டாட்டம்
தஞ்சாவூர்: தஞ்சையில், ஆண்டுதோறும் தஞ்சை மாவட்ட நாயுடு பெருமக்கள் நலச்சங்கத்தினர் யுகாதி விழா சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அதன்படி, கடந்த 31ம் தேதி தஞ்சையிலுள்ள பெசன்ட் லாட்ஜில் யுகாதி திருவிழா நடந்தது. இதையொட்டி, முன்னதாக, தஞ்சையிலுள்ள மாமணிக்கோவிலில் பிரபந்த சேவையும், காலை 10 மணிக்கு விழா அரங்க வளாகத்தில் கொடியேற்று விழாவும் நடந்தது. இதில், சங்க கவுரவத்தலைவர் ராஜாராம் பங்கேற்று, கொடியேற்றி வைத்தார். பெண்களுக்கு, காலையில், ரங்கோலி கோலப்போட்டி, சிறுவர், சிறுமியருக்கு விளையாட்டு போட்டி மற்றும் மாலையில், மாறுவேட, நடனப்போட்டி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவுக்கு தஞ்சை மாவட்ட நாயுடு பெருமக்கள் நலச்சங்க தலைவர் பக்தவச்சலம் தலைமை வகித்தார். கவுரவ தலைவர்கள் வரதராஜூலு, ராதாகிருஷ்ணன், வீராசாமி, இணை செயலாளர் பத்மநாபன் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட பொருளாளர் பாஸ்கர், பொதுச்செயலாளர் சீத்தாராமன் ஆகியோர் ஆண்டறிக்கை வாசித்தனர். இவ்விழாவில், ராஜகோபால், ராஜ்மோகன் ஆகியோர் சேவையை பாராட்டி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து யுகாதி விழா போட்டியில் பங்கேற்று, வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசு வழங்கப்பட்டது. சங்க அலுவலக செயலாளர் தீனதயாளன் நன்றி கூறினார்.