தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மனுக்கு 1,500 பால்குட ஊர்வலம்
ADDED :4228 days ago
தஞ்சை
: தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மனுக்கு பால்அபிசேகம் நேற்று நடைபெற்றது.
நேற்று காலை 4 ஆயிரம் லிட்டர் பால் 1,500 பால் குடங்களில் தஞ்சை
சிவகங்கைபூங்கா பெத்தண்ணன் கலையரங்கில் இருந்து ஊர்வலமாக எடுத்து
செல்லப்பட்டது. மேலவீதி, வடக்குவீதி, கீழவீதி, கொண்டிராஜபாளையம்,
வெள்ளைப்பிள்ளையார்கோவில், பழையமாரியம்மன்கோவில் ரோடு, சாலக்காரத்தெரு,
ஆதிமாரியம்மன்கோவில் வழியாக புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலை
சென்றடைந்தது. அங்கு மாரியம்மனுக்கு பால்அபிசேகம் நடைபெற்றது.