உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆகம பூஜை பயிற்சி முகாம்!

ஆகம பூஜை பயிற்சி முகாம்!

மதுரை: திருப்பரங்குன்றத்தில், கிராம கோயில் பூஜாரிகள் பேரவை சார்பில், மதுரை மாவட்ட கிராம கோவில் பூஜாரிகளுக்கு கோயில் வழிபாட்டு முறை இலவச பயிற்சி முகாம் நடந்தது. நிர்வாக அறங்காவலர் சவுந்தரராஜன் தலைமை வகித்தார். மாநில இணை அமைப்பாளர் கண்ணன் வரவேற்றார். துணை அமைப்பாளர் சதானந்தம், சோமசுந்தரம், கணேச பண்டாரம் பேசினர்.வேதபாடசாலை முதல்வர் சிவஸ்ரீ ராஜா, எம்.எல்.ஏ., சுந்தரராஜன், ராமகிருஷ்ண மடம் தலைவர் கலமாத்மானந்தா பயிற்சி பெற்றோருக்கு சான்றிதழ் வழங்கினார். திருமங்கலம் ஒன்றிய அமைப்பாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !