உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சமயபுரம் பூச்சொரிதல் விழா பூத்தட்டு எடுக்கும் நிகழ்ச்சி

சமயபுரம் பூச்சொரிதல் விழா பூத்தட்டு எடுக்கும் நிகழ்ச்சி

குளித்தலை: சமயபுரம் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா முன்னிட்டு கரூர் மாவட்டம் தோகமலையில் இருந்து பக்தர்கள் முதலாமாண்டாக பூத்தட்டு எடுத்துச் சென்றனர். இதில், குறிஞ்சி நகரில் உள்ள விநாயகர், பகவதியம்மன், கருப்பசாமி மற்றும் வெள்ளப்பட்டி மாரியம்மன் போன்ற கோவில்களில் சிறப்பு அபிஷேகம் செய்தனர். அங்கு பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. அதன் பின், இரவு பகவதியம்மன் கோவிலில் பக்தர்கள் ஏற்பாடு செய்திருந்த ஏழு வகையான மலர்களை, அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் சமயபுரம் கொண்டு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !