திரவுபதியம்மன் கோவிலில் வெள்ளி கவசம் சாற்றல்!
ADDED :4243 days ago
உளுந்தூர்பேட்டை: சேந்தநாடு கிராமத்தில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த திரவுபதியம்மன் கோவிலில் 5 கிலோ வெள்ளி கவசம் சுவாமிக்கு சாற்றப்பட்டது. உளுந்தூர்பேட்டை தாலுகா சேந்தநாடு கிராமத்தில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த திரவுபதி அம்மன் கோவிலில் கடந்த ஆண்டு புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. திரவுபதியம்மனுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் கோவில் பரம்பரை அறங்காவர் ராமசாமி மற்றும் கிராம மக்களின் முயற்சியால் ரூ. 3 லட்சம் மதிப்புள்ள 5 கிலோ வெள்ளி கவசம் சாற்றப்பட்டது. அம்மனுக்கு வெள்ளி கவசம் சாற்ற நேற்று காலை 8 மணிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தது.