உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பல்லகச்சேரி அம்மன் கோவில் திருவிழா: அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்!

பல்லகச்சேரி அம்மன் கோவில் திருவிழா: அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்!

தியாகதுருகம்: பல்லகச்சேரி முத்து மாரியம்மன் கோவில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி தேர் இழுத்து நேர்த்தி கடன் செலுத்தினர். தியாகதுருகம் அடுத்த பல்லகச்சேரி முத்துமாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 23ம் தேதி காப்பு கட் டுதலுடன் துவங்கியது. தினமும் சக்தி கரகம் அலங் கரித்து திருவீதியுலா நடந்தது. கோவில் வளாகத்தில் மாரியம்மன் சரித்திர பாரத சொற்பொழிவு நடந்தது. கடந்த 31ம் தேதி மோடி எடுத்தல் நிகழ்ச்சியும், நேற்று முன்தினம் ஆரியமாலா, காத்தவராயன் திருக் கல்யாண <உற்சவம், கழுமரம் ஏறும் நிகழ்ச்சியும் நடந்தது. திருவிழாவை முன்னிட்டு 100 க்கும் மேற்பட்ட தேர் அலங்கரிக்கப்பட்டு மாரியம்மன் படத்தை வைத்து பக்தர்கள் அலகு குத்தி முக்கிய வீதிகள் வழியே இழுத்து சென்றனர். ஒன்றிய துணை சேர்மன் தைலம்மாள் அய்யப்பா, ஊராட்சி தலைவர் அலமேலு அருணாச்சலம், பாசறை பிரபு, குமரவேல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !