அவலூர்பேட்டை சித்தகிரி முருகன் கோவிலில் கரிக்கோல ஊர்வலம்
ADDED :4241 days ago
அவலூர்பேட்டை: அவலூர்பேட்டை சித்தகிரி முருகன் கோவிலில் புதிதாக செய்யப்பட்ட சகடை கரிக்கோல ஊர்வலம் நடந்தது.அவலூர்பேட்டை சித்தகிரி முருகன் கோவில் திருவிழாக்களின் போது சுவாமி ஊர்வலமாக கொண்டு செல்வதற்காக புதிய வாகனம் (சகடை), புதிய குடை, இரண்டு சுருட்டிகள் புதிதாக செய்யப்பட்டன. இதன் கரிக்கோல நிகழ்ச்சி நடந்தது.ஊராட்சி தலைவர் கலாராஜவேலா யுதம், விழாக்குழு தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டனர். வீதியுலாவின் போது வீடுகள் தோறும் பெண்கள் ஆரத்தி எடுத்தனர்.முன்னதாக முருகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.