உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மழை வேண்டி 1008 தீர்த்தக்குட அபிஷேகம்

மழை வேண்டி 1008 தீர்த்தக்குட அபிஷேகம்

மேட்டுப்பாளையம்: மழை வேண்டியும், உலக நன்மைக்காவும் , அட்டப்பாடி அருகே 1008 பெண்கள் தீர்த்தக்குடங்களை எடுத்து வந்து முருகன் சுவாமிக்கு அபிஷேகம்செய்தனர்.
கேரளா, பாலக்காடு மாவட்டம், அட்டப்பாடி அருகே கோட்டத்துறை உள்ளது. இப்பகுதி மக்கள் விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ளனர். பருவ மழை சரியாக பெய்யாததால், கிணறுகளில் நீர் ஊற்று வற்றி விட்டது. இதனால் விவசாயம் செய்ய முடியாத  நிலை ஏற்பட்டுள்ளது. இப்பகுதியை சேர்ந்த பெண்கள், உலக நன்மைக்காவும், மழை வேண்டியும், 1008 தீர்த்தக்குடங்களை எடுத்து  வந்தனர்.
சிறுவாணி ஆற்றில் இருந்து தீர்த்த குடத்தை எடுத்து வந்து கரையோரம் உள்ள விநாயகர் கோவிலில் வைத்து பூஜை செய்தனர். பின் அங்கிருந்து சுமார் 2 கி.மீ. ஊர்வலமாக நடந்து சென்று மேல் கோட்டத்துறையில் உள்ள முருகன் கோயிலில் சுவாமி மீது ஊற்றி அபிஷேகம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !