ராமகிருஷ்ண பஜனை மடத்தில் ராமநவமி விழா இன்று துவக்கம்!
ADDED :4244 days ago
திருப்பூர் : திருப்பூர் முன்சீப் ஸ்ரீனிவாசபுரத்தில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ண பஜனை மடத்தில், 101ம் ஆண்டு ராமநவமி விழா, இன்றிரவு 7.00 மணிக்கு, ராம விநாயகர் அபிஷேகத்துடன் துவங்குகிறது.நாளை (8ம் தேதி) முதல் 11ம் தேதி வரை, தினமும் காலை 7.00 மணிக்கு விஷ்ணு சகஸ்ரநாம அர்ச்சனை; இரவு 7.00 மணிக்கு, அனந்த பத்மநாபாச்சாரியாரின், ஸ்ரீமத் ராமாயண உபன்யாசம்; 10ம் தேதி ஸ்ரீ ராம பட்டாபிஷேகம் நடக்கிறது. வரும் 11ம் தேதி ஆஞ்சநேய வைபவம், 13ம் தேதி காலை, உஞ்ச விருத்தி, காலை 10.00 மணிக்கு சீதா கல்யாணம் நடக்கிறது. முரளிதர குருஜியின் சிஷ்யர், ஸ்ரீகாந்த் கவுண்டிய பாகவதர், சொற்பொழிவு நிகழ்த்துகிறார். அன்று மாலை 6.00 மணிக்கு வசந்த கேளிக்கை, பவ்வளிம்பு, ஆஞ்சநேய உற்வம் நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது.