உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாளை அரியலூர் கல்லங்குறிச்சி பெருமாள் கோயில் திருவிழா

நாளை அரியலூர் கல்லங்குறிச்சி பெருமாள் கோயில் திருவிழா

அரியலூர் :  அரியலூர் மாவட்டம், கல்லங்குறிச்சியில் உள்ள கலியுக வரதராசப் பெருமாள் கோவில் திருவிழா,  கடந்த செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று இரவு சுவாமி சூரிய வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வருகிறார்.தொடர்ந்து தினமும் பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளுகிறார்.விழாவின் 7 -ம் திருவிழாவான ஏப்.14 மாலை திருக்கல்யாணம், படிச்சட்டம், இரவு கண்ணாடி பல்லக்கு கண்டருளுதல் நடைபெறுகிறது.ஏப்.16 காலை 7 மணிக்கு திருத் தேரோட்டமும், ஏப். 17 இரவு ஏகாந்த சேவை நடைபெறுகிறது. ஏப்.18 வெள்ளிப் படிச்சட்டம் மஞ்சள் நீர் பாலிகை நீர்த்துறை சேர்த்தல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவுறுகிறது.   


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !