உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா கோலாகலம்

திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா கோலாகலம்

ஸ்ரீமுஷ்ணம்; ஸ்ரீமுஷ்ணம் தட்டாரத்தெரு திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா சிறப்பாக நடந்தது.ஸ்ரீமுஷ்ணம் தட்டாரத் தெருவில் உள்ள  ஸ்ரீ திரவுபதியம்மன்கோவில் தீமிதி திருவிழா கடந்த மார்ச் மாதம் 18ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. விழாவையொட்டி 18 நாட்களாக மகாபாரதம் படிக்கப்பட்டது. இதில் கர்ணன் பிறப்பு, தர்மர் பிறப்பு, அம்மன் பிறப்பு, அம்மன் திருக்கல்யாணம், அரவாண் களபலி உற்சவங்கள் நடந்தது. இதில் அசுரன் வதம், துகில் உரித்தல் உள்ளிட்ட சம்பவங்கள் நாடகமாக நடித்து காண்பிக்கப்பட்டது.  18ம் நாள் திருவிழாவான தீமிதி திருவிழா நேற்று முன்தினம் மாலை நடந்தது. விழாவில் திருக்குளக்கரையில் இருந்து அக்னி கரகம் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக வந்து கோவில் முன்புறம் உள்ள பூக்குழியில் தீமித்து அம்மனை வழிபட்டனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு  சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளைகோவில் நிர்வாகத்தினர் மற்றும்  தட்டாரத்தெரு வாசிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !