உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / துலாம்: (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3) வீடு வாங்கலாம்! - 65/100

துலாம்: (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3) வீடு வாங்கலாம்! - 65/100

சுக்கிரனை ஆட்சி கிரகமாகக் கொண்ட துலாம் ராசி அன்பர்களே! நீங்கள் கலை ஆர்வம் மிக்கவர்களாகஇருப்பீர்கள். நீதி, நேர்மை எப்பக்கம் இருக்கிறதோ அப்பக்கம் சாய விரும்புவீர்கள். உங்கள் நட்புகிரகங்களான செவ்வாய், கேது ஆகியோர் சாதகமற்ற சூழ்நிலையில் இருக்க, இந்த புத்தாண்டுபிறக்கிறது. ஆனால், ஜூலை முதல் சுப மங்களமாக இருக்கும். இந்த ஜய வருடத்தில் உங்கள் ராசிக்குதற்போது 9-ம் இடமான மிதுனத்தில் குரு உள்ளார். அவர் குடும்பத்தில் பல்வேறு முன்னேற்றங்களை தந்து மகிழ்ச்சி அடையவைப்பார். ஜூன்13ல், குரு பகவான் மிதுனத்தில் இருந்து கடகத்திற்கு மாறுகிறார். 10ம் இடமான அங்கு அவர் பொருள் நஷ்டத்தையும், மன சஞ்சலத்தையும் ஏற்படுத்தலாம். சவால்களை சமாளிக்க வேண்டியிருக்கும்.ராகு தற்போது சனிபகவானோடு இணைந்து உங்கள் ராசியில் இருக்கிறார். அவர் உடல் உபாதையையும், உறவினர்கள் வகையில் வீண்மனக்கசப்பையும் தரலாம். ஆனால், அவர்கள் மீது குருபகவானின் பார்வை விழுவதால் பெரிய அளவு கெடு பலனை தரமாட்டார்கள். ஜூன்21ல், ராகு 12-ம் இடமான கன்னிக்கு மாறுகிறார். அதனால்வெளியூர் பயணம் ஏற்படலாம். கேது தற்போது 7-ம் இடமான மேஷத்தில் இருக்கிறார். அவரால் அலைச்சல், மனவேதனை, மனைவி வகையில் தொல்லை வரலாம். ஜூன்21ல், அவர் மீனத்திற்கு சென்று நன்மை தருவார். பொருளாதார வளம் அதிகரிக்கும். பகைவர்களின் தொல்லையில் இருந்து விடுபடலாம். அபார ஆற்றல் பிறக்கும்.சனிபகவான் உங்கள் ராசியில் இருக்கிறார்.இது ஏழரை சனியின் உச்Œகட்ட காலம்தான். இதனால் உடல் உபாதைகள், உறவினர் வகையில் வீண்மனக்கசப்பு வரலாம். ஆனால், தற்போது அவர்வக்கிரத்தில் இருக்கிறார். வக்கிர காலத்தில் அவரால் சிறப்பாக செயல்பட முடியாது. சாதகமற்ற நிலையில் இருக்கும் அவரால்சிறப்பாக செயல்பட முடியாதது உங்களுக்கு சாதகமான பலனையே தரும். சனிபகவான் தான்நிற்கும் இடத்தில் இருந்து 3,7,10-ம் இடங்களை பார்ப்பார். அந்தவகையில் அவரது 3-ம் இடத்துப்பார்வை சிறப்பாக அமைந்துள்ளது. டிசம்பர் 16ல், சனிபகவான் விருச்சிகத்திற்கு மாறுகிறார். சனி 2-ம்இடத்தில் இருக்கும் போது குடும்பத்தில் பிரச்னைகளைஉருவாக்குவார். பொருளாதார இழப்பு ஏற்படும். ஆனால், சனிபகவானின் 10-ம் இடத்துப் பார்வை உங்களுக்கு சிறப்பாக அமைந்துள்ளது. அதன் மூலம் சில நற்பலன்கள் கிடைக்கும்.எந்தச் செயலையும் வெற்றிகரமாக நிறைவேற்றலாம். தடைகள் அகலும். பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். செலவுகளும் ஏற்படும். உங்கள் மீதான அவப்பெயர்மறையும். செல்வாக்கு மேலோங்கும். அக்கம்பக்கத்தினர் உங்களைப் புகழ்வர். ராகுவால் வரும் தடைகளை எளிதில் முறியடிக்கலாம்.குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆடம்பர பொருட்களை வாங்கலாம். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் ஆண்டின் தொடக்கத்தில் கைகூடும். அதுவும் நல்ல வரனாக அமையும். தம்பதியினரிடையே அன்பும், பாசமும் மேம்படும்.குழந்தை பாக்கியம் கிடைக்கும். விருந்து, ஜூன்13 முதல் வீட்டில் சிற்சில பூசல்கள் வரலாம். விட்டுக் கொடுத்து போகவும். செப்டம்பர், நவம்பரில் வீடு, மனை வாங்க யோகம் உண்டு. தொழில், வியாபாரம்: வியாபாரிகள் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும். உங்களிடம் வேலை பார்ப்பவர்கள் நம்பிக்கையுடன் இருப்பர். அரசிடம் எதிர்பார்த்த உதவிகள் தொடக்க காலத்தில் கிடைக்கும். இது ஏழரை சனி காலம் என்பதால், புதிய தொழில் வேண்டாம். யாரையும் நம்பி பணத்தைஒப்படைக்காதீர்கள். அரசு வகையில் சலுகைகளை எதிர் பார்க்க முடியாது.பணியாளர்கள்: உத்தியோக மாற்றம் கிடைக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். ஜூன் முதல் வேலைப்பளு மேலும் அதிகரிக்கும். மேல்அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். சிலர் வீண் மனக் குழப்பத்தினால் வேலையில் ஆர்வமில்லாமல் இருப்பர். போலீஸ், ராணுவத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பர்.கலைஞர்கள்: புதிய ஒப்பந்தம், புகழ், பாராட்டு கிடைக்கும்.அரசியல்வாதிகள்: ஓரளவே மேம்பாடு காணலாம். பிரதிபலனை எதிர்பார்க்காமல் உழைக்க வேண்டியிருக்கும். மாணவர்கள்: இந்த கல்வி ஆண்டு சிறப்பாக இருக்கும். நல்ல மதிப்பெண் பெறலாம். அடுத்த கல்வியாண்டில்அதிக முயற்சி எடுத்து படிக்க வேண்டும். விவசாயிகள்: நெல், கோதுமை சோளம், மொச்சை சிறப்பைத் தரும். ஜூன் முதல் அதிக செலவு பிடிக்கும் பயிர்களை தவிர்க்கவும்.செப்டம்பர் முதல் நவம்பர் வரை நிலக்கடலை மற்றும் கிழங்குபயிர்கள் நல்ல மகசூலைத் தரும்.இந்தக் காலக்கட்டத்தில் புதிய நிலம் வாங்கலாம்.பெண்கள்: பணநிலையில்முன்னேற்றம் காண்பர்.பிள்ளைகளால் பெருமை கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !