உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) குடும்பத்தில் குதூகலம்! - 70/100

மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) குடும்பத்தில் குதூகலம்! - 70/100

குருவை ஆட்சி நாயகனாக கொண்டமீன ராசி அன்பர்களே!

இந்த ஆண்டு பிற்பகுதியில் கூடுதல் பலனை எதிர்பார்க்கலாம். குருபகவான் ஆண்டின் தொடக்கத்தில் சாதகமற்ற இடத்தில் இருந்தாலும், அவர் உங்கள் ராசி நாயகன் என்பதால் அதிக கெடுபலன்கள் நடக்காது. தற்போது குரு 4-ம் இடமான மிதுன ராசியில் உள்ளார். இது சிறப்பான இடம் என்று சொல்லமுடியாது. மன உளைச்சலையும், உறவினர் வகையில் வீண் பகையையும் உருவாக்கலாம். ஜூன்13ல், குரு பகவான் மிதுனத்தில் இருந்து கடகத்திற்கு மாறுகிறார். 5-ம் இடமான அங்கு அவர் நன்மை தருவார். பொருளாதார வளத்தையும், சுபங்களையும் தருவார்.நிழல் கிரகமான ராகு 8-ம் இடத்தில் சனிபகவானோடு இணைந்துள்ளார். அவர் தடைகளையும், உறவினர்கள் வகையில் மனக்கசப்பையும் ஏற்படுத்துவார். ஜூன்21ல், ராகு 7-ம் இடமான கன்னிக்கு மாறுகிறார். அப்போது, அவர் குடும்பத்தில் சிற்சில பிரச்னைகளைஉருவாக்குவார். அலைச்சல் அதிகரிக்கும்.வெளியூர் வாசம் நிகழும்.கேது 2-ம் இடமான மேஷத்தில் உள்ளார்.அங்கு பொருள் விரயத்தையும், பகைவர் வகையில் தொல்லையையும் தந்து கொண்டிருக்கிறார். ஜூன்21ல்இடம் பெயர்ந்து, உங்கள் ராசிக்குவருகிறார். உங்கள் முயற்சிகளில் தடைகள் வரலாம். பகைவர்களின் தொல்லை அதிகரிக்கும். உடல்நலம் பாதிக்கப்படலாம்.சனி பகவான்உங்கள் ராசிக்கு 8ம் இடமானதுலாம் ராசியில் உள்ளார். அஷ்டமத்தில் சனி பகவான், உங்கள் முயற்சிகளில் பல்வேறு தடைகளை உருவாக்குவார். உறவினர்கள் வகையில் மனக்கசப்பும், கருத்துவேறுபாடும் ஏற்படும். சிலர் ஊர்விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகும். இவையெல்லாம் பொதுவான பலன்தான். ஆனால், இந்த கெடு பலன்கள் அப்படியே நடக்கும் என்று கவலை கொள்ள வேண்டாம். தற்போது சனிபகவான் வக்கிரம் அடைந்துள்ளதால் அவரால் கெடுபலனை செய்ய முடியாது. மாறாக நன்மை ஓரளவு கிடைக்கும். டிசம்பர் 16ல், அவர் துலாமில் இருந்து விருச்சிகத்திற்கு மாறுகிறார். 9-ம் இடமான அதுவும் சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. இங்கு அவர் இருக்கும்போது எதிரிகளின் இடையூறு தலைதூக்கும்; பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும். இந்த கெடுபலன்களை கண்டு அஞ்ச வேண்டாம். சனிபகவான் சாதகமற்ற இடத்தில் இருந்தாலும், தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10-ம் இடங்களை பார்ப்பார். அந்த மூன்று பார்வைகளும் உங்களுக்கு சிறப்பாக உள்ளது.குடும்பத்தில் குதூகலம் இருக்கும். கணவன்-மனைவியிடையே அன்பு பெருகும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் தாமதமாகலாம். பிள்ளைகளால் பெருமைகிடைக்கும். விருந்து, விழாவென சென்று வருவீர்கள். தூரத்து உறவினர்கள் வகையில் இருந்து விரும்பத்தகாத செய்தி வரலாம். ஜூன் மாதம் முதல் வீட்டிற்கு தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்கும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கைகூடும். சிலர் முயற்சி எடுத்து புதிய வீடு கட்டலாம். வாகனங்கள் வாங்கவும் வாய்ப்பு உண்டு.

தொழில், வியாபாரம்: பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். தொழிலில் லாபம் அதிகமாக கிடைக்கும். சிலர் வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். போட்டியாளர்களின் இடையூறு கட்டுக்குள் இருக்கும். தீயோர் சேர்க்கையால் அவதிப்பட்டு வந்தவர்கள் அவர்கள் பிடியில் இருந்து விடுபடுவர். பெண்களால் இருந்து வந்த தொல்லை மறையும். புதிய தொழிலை தொடங்க நினைப்பவர்கள் குறைந்த முதலீட்டையே போடவும். ஜூன் மாதம் முதல் அரசு வகையில் உதவி கிடைக்கும்.

பணியாளர்கள்: பணியில் உள்ளவர்கள் முன்னேற்றம் காண்பர். வேலைப்பளு இருக்கும். ஜூன் முதல் வேலையில் முன்னேற்றம் இருக்கும். வேலை இன்றி இருப்பவர்கள் முயற்சி செய்தால் வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு. ஆண்டின் பிற்பகுதியில் தெய்வ அனுகூலம் இருப்பதால் உங்கள் கோரிக்கைகள் நிறைவேறும்.

கலைஞர்கள்: நல்ல புகழும், பெயரும் கிடைக்கப் பெறுவர். பண வரவு பரவாயில்லை. போட்டிகளை சமாளிக்கும் திறமையும் இருக்கும்.

அரசியல்வாதிகள்: திருப்தியான நிலைஇருக்கும். ஜூன் முதல் பதவிகள், புகழ், பாராட்டு கிடைக்கும்.

மாணவர்கள்: ஜூன் வரை முயற்சி எடுத்து படித்தால் வெற்றிகிட்டும். அடுத்த கல்விஆண்டில் சிறப்பான முன்னேற்றத்தைக் காணலாம். விரும்பிய கல்லூரியில் விரும்பிய பாடம் கிடைக்க பெறலாம்.

விவசாயிகள்: உழைப்புக்கு தகுந்த பலன் உண்டு. மானாவாரி பயிர்கள் மூலம் நல்ல மகசூலைபெறுவர். புதிய சொத்து வாங்கலாம். வழக்கு விவகாரங்கள் திருப்திகரமாக இருக்கும்.

பெண்கள்: குடும்பத்தில் முக்கியத்துவம் ஏற்படும். பணப்புழக்கம் போதுமான அளவு இருக்கும். உடல்நலம் சிறப்படையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !