செங்கல்பட்டு பாலமுருகன் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :4170 days ago
செங்கல்பட்டு : செங்கல்பட்டை அடுத்த வேதநாராயணபுரம் பாலாற்றங்கரை அருகில் இருகுன்றம் பள்ளியில் உள்ள அருள்குன்றம் என்னும் மலையில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ பாலமுருகன் மற்றும் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடைபெறுகிறது.ஸ்ரீ பாலமுருகன் திருத்தலத்தில் கருவறை விமானம், ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய நுழைவு வாயில் புதிதாக அமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டிநேற்று பல்வேறு பூஜைகள் நடந்தது. நாளை காலை 9 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.