உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேட்டைக்கார சிவன் கோவிலில் மேற்கு வாசல் நடை திறப்பு

வேட்டைக்கார சிவன் கோவிலில் மேற்கு வாசல் நடை திறப்பு

நீலகிரி: கூடலூர் நம்பாலக்கோட்டை வேட்டைக்கார சிவன் கோவிலில் மேற்குவாசல் நடை திறப்பு விழா நடைபெற்றது.   இக்கோயிலில்  மாதந்தோறும் பவுர்ணமி நாளில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்று தரிசித்து வருகின்றனர்.  அப்போது மீன நட்சத்திரத்தன்று மேற்கு வாசல் நடை திறப்பு விழா நடைபெற்று வருகிறது.விழாவையொட்டி மீனம் தின மகோற்சவ விழா எனும் மேற்குவாசல் நடை திறப்பு விழா  நடந்தது.   சிவன் மலை உச்சியில் உள்ள சிவலிங்கம், நந்தீஸ்வர ருக்கு சிறப்பு அபிஷேக ஆரா தனைகள், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.   மாலை 6.30 மணிக்கு மகா தீபாராதனையும், 7.15 மணிக்கு மேளவாத்தியங்கள் முழங்க மேற்கு வாசல் நடை திறக்கப்பட்டது. அப்போது மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !