புதுக்கோட்டை முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி விழா
ADDED :4236 days ago
பொன்னமராவதி : புதுக்கோட்டை மாவட்டம், கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில் சிறப்பு பெற்ற தலமாகும். இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா சிறப்பாக நடைபெறும். அதன்படி நிகழாண்டு மார்ச் 16ம்தேதி பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது. தொடர்ந்து அக்கினிக்காவடி, காப்புக் கட்டப்பட்டு 15 நாள்கள் மண்டகப்படிதாரர்கள் சார்பில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நேற்று நடைபெற்ற நாடு வருகை புரியும் விழாவில் பொன்னமராவதி, செவலூர், ஆலவயல், செம்பூதி ஆகிய நாடுகள் வருகை புரிந்தன. விழாவில் பக்தர்கள் உடலில் சகதி பூசியும், வேடமிட்டும் வந்தனர் .