எட்டயபுரத்தில் நாயன்மார்கள் குருபூஜை
ADDED :4306 days ago
எட்டயபுரம் : தூத்துக்குடி எட்டயபுரம் கான்சாபுரம் பகுதியில் பாலவிநாயகர் திருக்கோயிலில் பங்குனி மாத நாயன்மார்கள் குருபூஜை விழா கடந்த ஞாயிறன்று நடந்தது. தொடர்ந்து நடந்த விழாவில், பங்குனி மாதத்தில் அடங்கிய பொய்யடிமை இல்லாப்புலவர், காரைக்கால்அம்மையார், கணநாதநாயனார் உள்ளிட்ட 13 நாயன்மார்களுக்கும் குருபூஜை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பின் அன்னதானம் வழங்கப்பட்டது.