சோழவந்தான் ஜெனகை நாராயண பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்!
ADDED :4305 days ago
சோழவந்தான் : சோழவந்தான் ஜெனகை நாராயணப்பெருமாள் கோயிலில், பங்குனி பிரமோத்ஸவ திருவிழா திருக்கல்யாணம் நடந்தது. இதை முன்னிட்டு காலை சுவாமி, தேவியர்களுக்கு பல்வேறு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. பின்னர் பூதேவி, ஸ்ரீதேவியர், நாராயணப்பெருமாள் சப்பரங்களில் ரதவீதியில் உலா வந்து, கோயில் அலங்கார மண்டபத்தில் எழுந்தருளினர். மகளிரணி நிர்வாகிகள் சவுந்தரியம்மாள், லலிதா தலைமையில் திருமண சீர்வரிசையுடன் பெண்கள் ஊர்வலமாக வந்தனர்.பின், வேத மந்திரம் முழங்க திருக்கல்யாணம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி ராஜேந்திரகுமார், ஊழியர்கள் பூபதி, தர்மராஜ் செய்திருந்தனர்.