உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிடாரி எட்டியம்மன் கோவிலில் உற்சவம்!

பிடாரி எட்டியம்மன் கோவிலில் உற்சவம்!

பொன்னேரி : பிடாரி எட்டியம்மன் கோவிலில், உற்சவ பெருவிழா விமரிசையாக நடந்தது. பொன்னேரி, அங்கமுத்து தெருவில் அமைந்துள்ள பிடாரி எட்டியம்மன் கோவிலில், உற்சவ பெருவிழா நேற்று முன்தினம் நடந்தது.காலை, 10:00 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், 12:00 மணிக்கு கூழ் வார்த்தலும் நடந்தது. இரவு, 9:00 மணிக்கு, சிறப்பு வழிபாடுகளுடன் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நடந்தது.விழாவில், பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் திரளாக பங்கேற்று, அம்மனை வழிபட்டு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !