உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திரவுபதி அம்மன் கோவிலில் குண்டம் இறங்கிய பக்தர்கள்!

திரவுபதி அம்மன் கோவிலில் குண்டம் இறங்கிய பக்தர்கள்!

சேலம்; சேலம், திரவுபதியம்மன் கோவில் அக்னி திருவிழாவை முன்னிட்டு, நேற்று மாலை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கினர். சேலம், அழகாபுரத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் அக்னி திருவிழா கடந்த, 27ம் தேதி துவங்கியது. மார்ச், 31 முதல் ஏப்ரல், 4ம் தேதி வரை, தினமும் மாலை, ஸ்வாமி ஊர்வலம் நடந்தது. ஏப்., 5ம் தேதி இரவு சத்தாபரணம், நையாண்டி மேளம், கரகம், மயில் நடனம், வாண வேடிக்கைகளுடன் ஸ்வாமி திருவீதி உலா நடந்தது. 6ம் தேதி இரவு, 12 மணிக்கு வாண வேடிக்கைகளுடன் சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. இரவு, ஒரு மணிக்கு குயக்கலம் போய் கரகத்தோடு கங்கணம் கட்டி, சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று அதிகாலை, 4 மணிக்கு அரவானை போருக்கு அனுப்புதல் நிகழ்ச்சியும், காலை, 10 மணிக்கு ஸ்வாமி ஊர்வலமும் நடந்தது. மாலை, 6 மணிக்கு கோவில் பூசாரி பூ கரகத்துடன் குண்டம் இறங்கினார். தொடர்ந்து, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கினர். சிலர் குழந்தைகளுடன் குண்டம் இறங்கினர். இன்று மாலை, 4.30 மணிக்கு மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியும், ஸ்வாமி ஊர்வலமும் நடக்கிறது. நாளை காலை, 10 மணியுடன் அக்னி திருவிழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !