மாரியம்மன் தேர்த்திருவிழா: கம்பம் போடுதல் நிகழ்ச்சி!
ADDED :4238 days ago
உடுமலை : உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவுக்கான கம்பம் நடும் விழா இன்று இரவு நடக்கிறது. உடுமலையில் பிரசித்த பெற்ற மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, கடந்த 1ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பூஜை செய்யப்பட்டு வருகிறது. தேர்த்திருவிழாவுக்கான கம்பம் போடுதல் நிகழ்ச்சி இன்று இரவு 8.00 மணிக்கு, கோவில் வளாகத்தில் நடக்கிறது.