பாகூர் கோதண்டராம சுவாமி கோவிலில் ராமநவமி!
ADDED :4299 days ago
பாகூர்: பாகூர் சீதா சமேத கோதண்டராம சுவாமி கோவிலில், 28ம் ஆண்டு ராமநவமி உற்சவம் நடக்கிறது. பாகூர் அக்ரஹார வீதியில், சீதா சமேத கோதண்டராம சுவாமி கோவில் உள்ளது. இங்கு, 28ம் ஆண்டு, ராம நவமி உற்சவம் இன்று (8ம் தேதி) ராமர் ஜனனத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து, தினமும் காலை 7:00 மணிக்கு, சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடக்கிறது. வரும், 13ம் தேதி மாலை 7:00 மணிக்கு, சீதா ராமர் திருக்கல்யாணமும், 17ம் தேதி, ராமர் பட்டாபிஷேகமும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்துள்ளனர்.