உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாரியம்மன் கோயிலில் இன்று பொங்கல்: நாளை அக்னி சட்டி!

மாரியம்மன் கோயிலில் இன்று பொங்கல்: நாளை அக்னி சட்டி!

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை மாரியம்மன் கோயிலில் இன்று பொங்கலும்,நாளை அக்னி சட்டி ஏந்தி. பக்தர்கள் நேர்த்திகடன் செய்தலும் நடக்கிறது.அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறை டிரஸ்டிற்கு பாத்தியப்பட்ட, முத்து மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா, கடந்த ஒன்றாம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அம்மன், தினமும், பல மண்டக படிகளில் எழுந்தருள, ஒவ்வொரு அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். தினமும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடக்கும். பக்தர்கள் கொடி மரத்தில் தண்ணீர் ஊற்றி, வழிபாடு செய்கின்றனர். எட்டாம் நாள் விழாவாக, இன்று, பொங்கல் பண்டிகை நடக்கிறது.இதில், விரதமிருந்த பெண்கள், பக்தியுடன் கோயில் முன்பு, அம்மனுக்கு பொங்கல் இட்டு வழிபடுவர். நாளை(ஏப்.,9) விரதமிருந்த பக்தர்கள், அம்மனுக்கு 51, 101 அக்னி சட்டிகள் எந்தி, நேர்த்தி கடன் செலுத்துவர். விழாவில், அருப்புக்கோட்டை சுற்று கிராமத்தினர் கலந்து கொள்வர். தினமும், கோயிலின் அருகில் உள்ள மண்டபத்தில், கலை நிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள் நடந்து வருகிறது. பங்குனி பொங்கலை முன்னிட்டு, எஸ்.பி.கே., பொருட்காட்சியும் நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !