வீரகாளியம்மன் உற்சவ விழா
தாடிக்கொம்பு : தாடிக்கொம்பு அருகே உண்டார்பட்டியில் உள்ள வீரகாளியம்மன் மற்றும் சவுபாக்கிய மாரியம்மன் ஆகிய கோயில்களில் பங்குனி உற்சவ விழா நடந்தது. மார்ச் 30 அன்று சுவாமி சாட்டுதலுடன் துவங்கி, தினமும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. ஏப்ரல் 6 இரவு அம்மன் பிறந்த இடத்திலிருந்து வாண வேடிக்கையுடன் கொழு மண்டபம் வந்தடைந்தார். நேற்று காலை சந்தனவர்த்தினி ஆற்றில் வீரகாளியம்மன் சுவாமி அலங்கரிக்கப்பட்டு, மேளதாளம் முழங்க தேர்பவனி நடந்து, அம்மன் சன்னதி வந்தடைந்தது. மாவிளக்கு, அக்கினி சட்டி எடுத்தல் பொங்கல் வைத்தல் மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பக்தர்கள், ஆடு, கோழி, தானியங்களை அம்மனுக்கு காணிக்கையாக செலுத்தினர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இன்று மஞ்சள் நீராட்டத்துடன் அம்மன் சந்தனவர்த்தினி ஆற்றில் உள்ள பூஞ்சோலைக்கு பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது.