உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரியகுளத்தில் ராமநாமத்திற்கு இன்று பூஜை

பெரியகுளத்தில் ராமநாமத்திற்கு இன்று பூஜை

பெரியகுளம் : பெரியகுளத்தில், குளோபல் ஆர்கனைசேஷன் பார் டிவைனிடி இந்தியா டிரஸ்ட் சார்பில், ராமநவமியை முன்னிட்டு நாமத்வார் பிராத்தனை மையத்தில், ஹரே ராம நாமகீர்த்தனமும், அன்னதானமும் நடைபெற்று வருகிறது. இன்று (ஏப்.,8) ராமநவமியை முன்னிட்டு, நாமத்வார் பிராத்தனை மையத்தில், காலை 5.30 மணிக்கு போதனம், 6 மணி முதல் காலை 10 மணி வரை, அகண்ட மஹாமந்திர நாமகீர்த்தனம், திருமஞ்சனம் சாற்றப்படுகிறது. நாமத்வாரில் 35 கோடி ராமநாமத்திற்கு சிறப்பு பூஜை மற்றும் மாலையில் விசேஷ கூட்டுப்பிரார்த்தனை நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை ஸ்ரீகிருஷ்ண சைதன்யதாஸ், காசியம்மாள் மற்றும் ஆன்மிக பக்தர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !