வீரராகவர் கோவிலில் இன்று தவன உற்சவம் துவக்கம்!
ADDED :4209 days ago
திருவள்ளூர் : திருவள்ளூர் வீரராகவர் கோவிலில், தவன உற்சவம், இன்று துவங்கி, 10ம் தேதி வரை நடைபெறுகிறது. திருவள்ளூர் வைத்திய வீரராகவர் கோவிலில், தவன உற்சவம் இன்று துவங்குகிறது. 10ம் தேதி வரை நடைபெறும் தவன உற்சவத்தை முன்னிட்டு, தினமும் உற்சவருக்கு மதியம், 3:00 மணிக்கு திருமஞ்சனமும், மாலை 6:30 மணிக்கு உற்சவர் உள்புறப்பாடும் நடைபெறுகிறது. இன்றிரவு, 7:00 மணிக்கு, பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெறுகிறது.