கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் ராமநவமி உற்சவம் இன்று துவக்கம்!
ADDED :4209 days ago
சின்னசேலம்: சின்னசேலம் கன்னிகாபரமேஸ்வரி அம்மன் கோவிலில் ராமநவமி உற்சவம் இன்று துவங்குகிறது. சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் இன்று 8ம் தேதி முதல் 17ம் தேதி வரை ராமநவமி விழா நடைபெறுகிறது. நிகழ்ச்சியை முன்னிட்டு தினசரி காலை சீதா, லட்சுமணர், ராமர், ஆஞ்சநேயர் சுவாமிகளுக்கு அலங்காரம் செய்து பூஜைகள் நடக்கிறது. வரும் 15ம் தேதி முதல் 17ம் தேதிவரை திருக்கல்யாணம், பட்டாபிஷேகம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை நிர்வாக கமிட்டியினர் செய்து வருகின்றனர்.