உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மென்மை குணம் படைத்த தமிழர் பண்பு வெளிநாட்டினர் வியப்பு!

மென்மை குணம் படைத்த தமிழர் பண்பு வெளிநாட்டினர் வியப்பு!

ராமநாதபுரம் : மென்மை குணம் படைத்த தமிழர்களின் பண்பு மிகவும் கவர்ந்தது, என, வாழும் கலை அமைப்பைச் சேர்ந்த வெளிநாட்டு சீடர் தெரிவித்தார். இந்தஅமைப்பைச் சேர்ந்த வெளிநாட்டினர், இந்திய கலாசாரம் பற்றி அறிந்து கொள்ளும் வகையில், தமிழகத்தில் பயணம் மேற்கொண்டுள்ளனர். கொலம்பியா, அர்ஜென்டினா, துருக்கி, ஹாலந்து, பிரான்ஸ், தென்னப்ரிக்கா நாடுகளைச் சேர்ந்த மூன்று பெண் உட்பட 14 பேர், ராமேஸ்வரம் கோயிலுக்கு சென்றனர். பின், ராமநாதபுரம் சூரன்கோட்டை எம்.ஜி.ஆர்., நகர் வந்தனர். அங்குள்ள மக்களை சந்தித்து, வாழ்க்கை முறை பற்றி தெரிந்து கொண்டனர்.பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இஸ்வான் கூறுகையில், இந்திய கலாசாரம், மிகவும் பிடிக்கும். தமிழர்களின் பண்பாடு, உணவுகள், வாழும் நெறி எங்களை மிகவும் கவர்ந்துள்ளது. மென்மை குணம் படைத்த தமிழர்களின் பண்பு, கோயில் சிற்பங்கள் பிரமிக்கத்தக்கவை. பார்த்து ரசிக்க வேண்டிய இடங்கள் பல உள்ளன. அவற்றை காண்பதில் மகிழ்ச்சி, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !