ராமேஸ்வரத்தில் ராமநவமி விழா!
ADDED :4214 days ago
ராமேஸ்வரம் : ராமநவமியை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் நேற்று, விவேகானந்தா வித்யாலயா பள்ளியில், ராமர் படத்திற்கு பூஜை, மகா தீபாராதனை நடந்தது. பள்ளி தாளாளர் சுவாமி சாரதானந்தா, முதல்வர் ஜெயமணி, ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். பின், ராமர், லெட்சுமணர், சீதை, அனுமான், வானர சேனை வேடமணிந்த பள்ளி மாணவர்கள், ராமர் உருவ தேருடன், நான்கு ரத வீதிகளில் ஊர்வலம் சென்றனர். ராமநாதபுரம் ஐயர் மடம், இடையர்வலசை இந்திரா நகரில் ஷீர்டி சாய்பாபா ஜெயந்தி, ஸ்ரீராம நவமி பெருவிழா நடந்தது. இதை முன்னிட்டு நேற்று காலை சிறப்பு அபிஷேக ஆராதனை, கூட்டு பிரார்த்தனை நடந்தது. ஏராளமானோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ஷீர்டி சாய்பாபா சன்மார்க்க டிரஸ்ட் நிர்வாகிகள் செய்தனர்.