ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம்!
ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூரில், ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவிலில், வரும் 15ம் தேதி காலை கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ உற்சவம் துவங்குகிறது. ஸ்ரீபெரும்புதூரில், ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், ஆண்டு தோறும் சித்திரை மாதம், பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், வரும் 15ம் தேதி முதல் 24ம் தேதி வரையில், ஆதிகேசவப் பெருமாள் பிரம்மோற்சவமும், அதனைத் தொடர்ந்து வரும், 25ம் தேதி முதல் மே 5ம் தேதி வரையில் ராமானுஜர் அவதார உற்சவம் நடைபெற உள்ளது. முதல் பத்துநாள் பிரம்மோற்சவத்தில், ஆதிகேசவப் பெருமாள், தினமும், காலையிலும், மாலையிலும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதி உலா வந்து, பக்தர்களை அருள்பாலிப்பார். வரும் 25ம் தேதி, முதல் ராமானுஜர் அவதார உற்சவம் துவங்குகிறது. தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும் உற்சவத்தில், மே 3ம் தேதி, காலை திருத்தேரில் ராமானுஜர் எழுந்தருளி, வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
ஆதிகேசவ பெருமாள் பிம்மோற்சவ திருவீதி உலா விவரங்கள் வருமாறு:
ஏப். 15ம் காலை கொடியேற்றம் மாலை சிம்ம வாகனம்
ஏப். 16ம் காலை சேஷ வாகனம் மாலை ஹம்ச வாகனம்
ஏப். 17ம் காலை கருட வாகனம் மாலை ஹனுமந்த வாகனம்
ஏப். 18ம் காலை சூர்ய பிரபை மாலை சந்திர பிரபை வாகனம்
ஏப். 19ம் காலை தங்க பல்லக்கு மாலை யாழி வாகனம்
ஏப். 20ம் காலை சூர்ணாபிஷேகம் மாலை யானை வாகனம்
ஏப். 21ம் காலை திருத்தேர் இரவு புஷ்ப பல்லக்கு
ஏப். 22ம் காலை வன விஹாரம் இரவு குதிரை வாகனம்
ஏப். 23ம் காலை தங்கப்பல்லக்கு மாலை மங்களகிரி வாகனம்
ஏப். 24ம் மாலை ஸப்த வாகனம்.