வேலூர் தன்வந்திரி பீடத்தில் ராமநவமி விழா
ADDED :4307 days ago
வாலாஜாபேட்டை ; வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டையை அடுத்த ஸ்ரீதன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் நவமியையொட்டி வாலாஜாபேட்டை ஸ்ரீதன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் அமைந்துள்ள ஸ்ரீபட்டாபிஷேக ராமர் விக்கிரகத்துக்கு அபிஷேகமும், பூஜைகளும் நடைபெற்றன .பீடத்தில் அமைந்துள்ள ஸ்ரீராமர், சீதையுடன் லட்சுமணர், பரதர், முருகர், நாரதர், வசிஷ்டர், சத்ருகனர், ஈஸ்வரர், விநாயகர், ஆஞ்சநேயர், தசரதர், சூரிய பகவான் ஆகியோர் விக்கிரகங்கள் உள்ளன. இந்த விக்கிரகத்துக்கு பஞ்ச திரவிய அபிஷேகமும், ஹோமமும் நடைபெற்றன. விழா முடிவில் பக்தர்களுக்கு பானகமும், நீர் மோரும் வழங்கப்பட்டன.