கும்பகோணம் ஆஞ்சநேயர் கோயிலில் ராமநவமி விழா
ADDED :4311 days ago
கும்பகோணம்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அனுக்ரக ஆஞ்சநேயர் கோயிலில் நேற்று ஸ்ரீராம நவமி விழா நடைபெற்றது. நேற்று காலை அனுக்ஞை, சங்கல்பத்துடன் தொடங்கிய ராமநவமி விழாவில் ஆஞ்சநேயருக்கு மூலமந்த்ர ஹோமம், திருமஞ்சனம் சாற்றுமுறை தீபாராதனை நடைபெற்றது. அப்போது ஆஞ்நேயர் வெள்ளிகவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மாலையில் ராமர், சீதை, லட்சுமணர், அனுக்கிரக ஆஞ்சனேயர் ஆகிய சுவாமிகளின் திருவீதியுலா நடைபெறறது.