பேரூர் மேல்மடத்தில் ராமநவமி விழா!
ADDED :4221 days ago
பேரூர் : பேரூர் மேல்மடத்தில் ராமநவமி விழா நடந்தது. விழா, கடந்த 6ம் தேதி காலை 8.00 மணிக்கு, ஸ்வாமி ஆவாஹனம் பூஜையுடன் துவங்கியது. சுந்தரகாண்டம் பாராயணம் நடந்தது. பின்னர், மதியம் 12.00 மணிக்கு, தீபாராதனை, பிரசாத வினியோம் நடத்தப்பட்டு மாலை, ரவிபாகவதர் குழுவினரின் திவ்யநாம பஜனை நடந்தது. இரவு மங்களஹாரத்தி நிகழ்ச்சியுடன் விழா முடிவுற்றது. விழா ஏற்பாடுகளை, ராஜகணபதி பஜனை டிரஸ்ட் செய்திருந்தது.