உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவசுப்ரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம்!

சிவசுப்ரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம்!

சென்னை: சென்னை, திருவல்லிக்கேணி நெசவாளர் தெருவில் உள்ள, கற்பக விநாயகர் சிவசுப்ரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம், இன்று, வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. இக்கோவில் பழமையானது. பாம்பன் சுவாமிகள், திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள், கூனம்பட்டி ஆதீன மகா சன்னிதானம், இக்கோவிலுக்கு வந்துள்ளனர். இக்கோவிலில், மீனாட்சி சுந்தரேஸ்வரப் பெருமான் சன்னிதி, பரிவார மூர்த்திகள் சன்னிதி உள்ளன. பக்தர்களின் உதவியோடு, ஐந்து நிலை கொண்ட, ராஜகோபுரம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இதன் கும்பாபிஷேகத்தை, இன்று நடத்த, முடிவு செய்யப்பட்டது. இதற்காக யாக சாலை பூஜைகள், கடந்த, 4ம் தேதி துவங்கின. கும்பாபிஷேக தினமான இன்று காலை, 4:00 மணிக்கு, விநாயகர் பூஜை, பிம்பசுத்தி, அனைத்து தெய்வங்களுக்கும், காப்பு அணிவித்தல், ஆறாம் கால யாகசாலை பூஜை துவங்கும். காலை, 5:00 மணியில் இருந்து, 6:00 மணிக்குள், அனைத்து பரிவார மூர்த்திகள் மற்றும் பரிவார கோபுரங்களுக்கு, கும்பாபிஷேகம் நடைபெறும். அதன்பின், ஆறாம் கால பிரதான யாகசாலை பூஜை நடைபெறும். காலை, 9:15 மணியில் இருந்து, 10:15 மணிக்குள், சிவசுப்ரமணிய சுவாமி கோபுரம், ராஜகோபுரம், வள்ளி தேவசேனா சமேத மூலவர் சிவசுப்ரமணிய சுவாமி கும்பாபிஷேகம், வெகு விமரிசையாக நடைபெறும். காலை, 10:45 மணிக்கு, கூனம்பட்டி ஆதீன சுவாமிகளின் அருளாசி; 11:00 மணிக்கு, மகா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெறும். மாலை, 6:00 மணிக்கு, திருக்கல்யாணம், இரவு, 8:00 மணிக்கு, சுவாமி வீதியுலா நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !