கிருஷ்ணகிரியில் ஸ்ரீ ராம நவமி விழா
ADDED :4220 days ago
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பழையப்பேட்டை ஸ்ரீ சீதாராம, ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் சமேத ஸ்ரீஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் ம்ருத்திகா பிருந்தாவனத்தில் ஸ்ரீராம நவமி விழா நேற்று துவங்கியது. விழாவை முன்னிட்டு, காலை 6.30க்கு நிர்மாலய அபிஷேகமும், 7.30க்கு பஞ்சாமிர்த அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மாலை பாராயணமும், பஜனையும் நடைபெற்றது. தொடர்ந்து, வரும் 24-ம் தேதி வரை காலை சிறப்பு பூஜைகளும், மாலை பஜனை, சிறப்பு ஹோமங்கள், பாராயணம் நடைபெற உள்ளன. 14- ம் தேதி பௌர்ணமியை முன்னிட்டு, காலை 10 மணிக்கு ஸ்ரீ சத்யநாராயண சுவாமி பூஜையும், மாலை ஸ்ரீ சீதா திருக்கல்யாண நிகழ்ச்சிகளும் நடக்கின்றன.