குன்னூர் தந்திமாரியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்!
ADDED :4313 days ago
குன்னூர் : குன்னூர் தந்திமாரியம்மன் கோவிலில் நேற்று திருக்கல்யாண உற்சவம் நடந்தது.குன்னூர் தந்திமாரியம்மன் கோவிலில் தினந்தோறும் பல்வேறு உபயதாரர்கள் சார்பில் தேர்த்திருவிழா நடந்து வருகிறது. நேற்று சகோதரர்கள் சங்கம் சார்பில், திருக்கல்யாண உற்சவம் நடந்தது. காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சீர்தட்டு ஊர்வலம், திருக்கல்யாண உற்சவம் ஆகியவை நடந்தது. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் அக்கினிசட்டி ஊர்வலம், வேப்பமர அலங்காரத்தில் அம்மன் திருத்தேர் பவனி ஆகியவை நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.