வரதராஜப்பெருமாள் கோவிலில் ஸ்ரீமத்ராமானுஜர் விழா!
                              ADDED :4223 days ago 
                            
                          
                          ஆனைமலை : பொள்ளாச்சி வட்டம், ஆனைமலை அருகே உள்ள குளத்துப்புதூரில் உள்ள ஸ்ரீபூமி தேவி நீளாச மேத வரதராஜப்பெருமாள் கோவிலில் இன்று மகாசம்ப்ரோஷண 22 ஆம் ஆண்டு நிறைவு விழாவும், 2017ல் ஆயிரமாவது ஆண்டு விழாக்காணும் ஸ்ரீமத்ராமானுஜர் விழாவும் நடைபெற்றது. இவ்விழாவில் 81 கலச ஸ்நபந திருமஞ்சனமும், ஸ்ரீமகாசுதர்ஸன, தன்வந்திரி, பஞ்சசூக்த ஹோமங்களும் நடை பெறுகிறது. இன்று காலை 7;00 மணிக்கு கோ பூஜை, விசுவரூபம், புண்யா வசனம். திருவாராதனம் பெருமாள் தாயார், கருடாழ்வார், ஆஞ்சநேயர் ஆகியோருக்கு ஸ்நபந திருமஞ்சனமும் நடைபெற்றது.. இதையடுத்து 11:00 மணிக்கு ஆந்திரா ஸ்ரீராம் நகரை சேர்ந்த தேவநாதராமானுஜ ஜீயர் சுவாமிகளின் மங்களாசாசனமும், ஆசியுரையும் நடைபெற்றது.