உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சீரடி சாயிபாபா சேவா சமிதி சார்பில் ராமநவமி உற்சவம்

சீரடி சாயிபாபா சேவா சமிதி சார்பில் ராமநவமி உற்சவம்

புதுச்சேரி: புதுச்சேரி சீரடி சாயி நகரில் உள்ள சீரடி சாயிபாபா சேவா சமிதி சார்பில் ராமநவமி விழா நடந்தது. விழாவையொட்டி நேற்று காலை 8.00 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து 8.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பகல் 12.௦௦ மணிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. மாலை 6.30 மணிக்கு குழந்தை ராமரை தொட்டிலிடும் நிகழ்ச்சி, சாயி பஜனை நடந்தது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை சீரடி சாயிபாபா சேவா சேரிடபிள் டிரஸ்ட், சீரடி சாயிபாபா சேவா சமிதி நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !