சேவூர் கோவிலில் ஸ்ரீராம நவமி விழா
ADDED :4224 days ago
அவிநாசி : சேவூரில் உள்ள ஸ்ரீகல்யாண வெங்கட்ரமண பெருமாள் கோவிலில் நேற்று நடந்த ஸ்ரீராம நவமி விழாவில், பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்கார தீபாராதனை மற்றும் வழிபாடுகள் நடந்தன.விழாவையொட்டி, சகஸ்ர நாம பாராயணமும் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. வரன்பாளையம் இளைய பட்டம் சிவாச்சலம் துவக்கி வைத்தார். செயல் அலுவலர் மருதுபாண்டியன், டாக்டர் பிரபாகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.