உதயமாரியம்மன் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்
போடி : போடி பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள சந்தைப்பேட்டை, உதயமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மூன்று நாட்களாக விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், தன பூஜை, வாஸ்து சாந்தி, தீபாரதனை, நவக்கிரக நட்சத்திர, அஸ்த்திர ஹோமங்கள், யாக பூஜைகளும் நடந்தது. இன்று காலை 6 மணிக்கு மேல் விக்னேஸ்வர பூஜை, ஹோமம், தீபராதனை, நான்காம் கால யாக பூஜை, யாத்திர தானம் நடத்தப்படுகிறது. சிறப்பு யாக பூஜை செய்தும், தீர்த்தம் கொண்டு வரப்பட்டு, காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள், உதயமாரியம்மன் கோயிலில் அமைந்துள்ள பால விநாயகர், உதயமாரியம்மன், பாலமுருகன் சுவாமிகளுக்கு, கும்பாபிஷேகம் நடக்கிறது. ஏற்பாடுகளை, கோயில் தலைவர் சம்பத், துணைத்தலைவர்கள் சக்திவேல், ஜெயராமன், செயலாளர் மோகன்சிங், பொருளாளர்கள் காளிமுத்து, ஜெயபால் மற்றும் கோயில் நிர்வாகஸ்தர்கள், திருப்பணிக் கமிட்டி நிர்வாகஸ்தர்கள் செய்து வருகின்றனர்.